சோதனை கண்டால் சாதனைசாதனையே பெண்மைக்கு சோதனை

சாலையோரம் மாலை சாரையாய்
சோலை பூக்கள் சேலை மறந்து
சுடிதார் சகிதமாய் வாகனபுகையில்
புரிந்தும் புரியாத புலம்பலுடன்...

அலுவலக சுமையில் ஒருபுறமும்
அன்னையாய் இல்லத்தில் மறுபுறமும்
அயராசக்தியுடன் அதிவேகம் தினமும்
அவதியில் அலுப்புடன் சுழன்றிட பாரீர்!!

இத்தனை இன்னல் இருந்தும் இன்னும்
இயங்கும் உலக வேகத்திற்கு ஈடாக
சுழன்று சுமையை சுமப்பதை பாரீர்
இயற்கையில் பெண்ணுக்கு இறைதந்த சுமை இன்னல்
முயன்று சுழன்றே இன்னலை சேர்ப்பதை பாரீர்!!

நத்தை ஓட்டை வாழ்நாளும் சுமப்பதுபோல்
பெண்ணே தேடி சுமப்பது கொடுமை
கொடுமையை வறுமை முன்மொழிய
பெண்ணடிமை வழிமொழிய
வேறுவழியின்ிற வாழ்கிறாள் தினம்வலியுடன்...

ஒருவிதத்தில் பழமை பெண்கள் அதிஷ்டமே
ஆனாலும் இன்றைய நிலை பெருங்கஷ்டமே
வாழ்வின் துன்பம்ஆசையே
வாழ்வின் ஆசை துன்பமோ!!

எழுதியவர் : கனகரத்தினம் (20-Apr-15, 9:40 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 73

மேலே