மாலைப்பொழுதினில்

அன்று
மாலை பொழுதினில்....
களைப்புடன் வீடு வந்து
என் மனைவியின் மடியில்....
நான்
கால் நீட்டி சற்று
சுகமாக ஓய்வெடுக்க…!

காலுக்கடியில்
என் செல்ல மழலைகள் …
என் பாதம் வலிக்கும் என்று
மாறி மாறி வருடிவிட ….!!

அடடா
என்ன சுகமான அந்த
மாலை பொழுது
எப்போ வரும்
என காத்து இருந்த அந்த நாட்கள்…..!!
இன்றும்
வாட மலராய் காத்துகொண்டே ..!!

"கரென்சிகள்" மாறினாலும்
கடந்தவை எல்லாம் மாறிவிடுமா ….

நான் வாழ்ந்த அந்த வாழ்க்கை…
கடல் கடந்து போனால் என்ன …
மீண்டும்
காத்து இருக்கேன்
என் பயண நாட்களுக்காய் ….!!!

எழுதியவர் : வீ கே (21-Apr-15, 2:16 pm)
சேர்த்தது : விஜய்குமார்
பார்வை : 77

மேலே