நிறைவேறாத ஆசை
பனி பொழியும் காலை நேரம்
ஆள் நடமாட்டம் இல்லாத தெருவீதி
தனியே சென்று கொண்டிருந்தேன் !
எதிரே அழகாய் அவள்
நடந்து வந்து கொண்டிருந்தாள்!
என்னையே பார்த்தபடி வருவதாய்
உள்மனம் சொல்லியது !
நம்மை ஏன் பார்க்க போகிறாள்
என அந்த நினைப்பை அழித்தேன் !
ஆனால் நீ நெருங்கி வருகையில்
தெரிந்தது
என்னை நோக்கி தான்
வருகிறாய் என்று !
உந்தன் வலது கரத்தில்
ஒரு லெட்டெர் !
லவ் லெட்டரோ ?
இருக்கலாம் !
இறைவா!
அடுத்து என்ன நடக்க போகிறதோ ?
பதட்டத்தில் உடல் வேர்த்து
நடுங்கியது !
என்னருகில் வந்தாள் அவள் !
வட்டமான முகம் , அழகான கண்கள்!
அளவெடுத்த
ஆரஞ்சு பழ உதடுகள் !
அத்தனை கனவு கன்னிகளும்
நினைவில் வந்து போனார்கள் !
உதடு குவித்து என்னிடம்
சொன்னாய் ,,,,
I லவ் யு என்று !
அந்த வார்த்தை என் செவியினில்
தேனாய் பாய்ந்தது !
நம்ப முடியவில்லை
கனவோ என்று
மீண்டும் கேட்டேன் !
ஆமாம் என்று வெட்கத்துடன்
அழகாய் சிரித்தாள்!
இருந்தும் மீண்டும் கேட்டேன்
கிள்ளி பார்த்து
தெரிந்து கொள்ளடா
என்று கவிதையாய் பேசினாய் !
உந்தன் கவிதை பேச்சில்
என்னை மறந்து
உன்னை கிள்ளி பார்கையில்
அடித்து தொலைத்தது
கடிகாரம் !
ஆம் கண்டது கனவு தான் !
ஆனால் கண்களில்
சொல்ல முடியாத
ஏமாற்றம் !
மீண்டும் கண்களை மூடி
உறங்க ஆரம்பித்தேன் !
இனி அவள் எது சொன்னாலும்
தலையாட்டும் முடிவோடு,, !
காத்திருப்புடன்
உங்கள் தோழன் தங்கதுரை

