காதல்

எண்ணக் கனவில் உன்னை நினைத்தேன்

மின்னல் ஒளியில் என்னை தொலைத்தேன்

கண்ணம் இரண்டில் கலைநயம் கண்டேன்

கருவிழி இரண்டில் காதல் கொண்டேன்

முத்து சிரிப்பில் பிறை நிலா கண்டேன்

செவ்வாய் இதழில் தேன் சுவை கண்டேன்

நாணல் இடையில் நவரசம் கண்டேன்


பின்னல் ஜடையில் பிள்ளை பருவம் கொண்டேன்

மெல்லிய வளைவில் தேனூர கண்டேன்

மல்லிகை பந்து மலர்ந்ததை கண்டேன்

கால்கள் இரண்டில் நளினம் கண்டேன்

கண்கள் உன்னை நித்தம் நாட!

எண்ணம் உன்னை சுற்றி ஓட !

உன்னை உன்னை எங்கும் தேட !

எந்தன் மனதில் உன் முகம் மலர !

பெண்ணே !நானும் கீதம் பாட !

வெண்ணிலா !உன்னை காதல் கொண்டேன் .

எழுதியவர் : சு ,முத்து ராஜ குமார் (22-Apr-15, 6:44 am)
Tanglish : kaadhal
பார்வை : 125

மேலே