பட்ட காயம் பேசுது

பட்ட காயம் பேசுது.

சுட்டுச்சுட்டு பட்டுப்பட்டு--அடி
பட்டகாயம் பேசுது--பேசாம
தட்டித்தட்டி விட்டுவிட்டு--கூசாம
முட்ட எட்டிப் பாயுது.

எவனுக்கென்ன ஆனாலென்ன--என்றே
கவனிக்காமல் போனோம்--இன்று
இவனுக்கென்ன நடந்தாலென்ன--என்றே
அவனுக்கென்ன கடந்தான்.

தனக்கு மட்டும் வலிக்குதென்றால்---கூவி
இனத்தைக் கூட்டி இழுப்பான்--ஆனால்
இனத்திற் கொரு துயர மென்றால்--பாவி
தனக்குத் தெரியாது என்பான்.

பாம்பு ஒன்று சீறி நின்றால்--திரண்ட
படையும் அஞ்சி நடுங்கும்--மிரண்டால்
சோம்பேறியும் சூரனாவான்---அவனிடம்
சுருண்டு ஊரும் ஒடுங்கும்.

நாயும் கூட ஓடக்கண்டால்---அது
பாய்ந்து பின்னே துறத்தும்---துணிந்து
கூர்ந்து அதை நோக்கி முன்னே--கோபப்
பார்வை விட்டால் பறக்கும்.

அவனுக்கென்ன அதிகம் வைத்தான்--மிரட்டி
அடக்க உன்னை துணிந்தான்--நீயும்
எதிர்த்து நின்று நிமிர்ந்து பார்த்தால்---உலகில்
எவனும் பாவி ஆகமாட்டான்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (22-Apr-15, 6:55 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 78

மேலே