நகரும் படிகளாய்

என் அன்பை ஊதாரித்தனமாய் செலவீனம் செய்துவிட்டேன் உனக்காக உன் உறவுக்காக!
ஆனால், நீயோ
என் அன்பை விழுங்கி
அறிவை கெடுத்து
அழகைத் தேடுகிறாய்;
கடனட்டை யில்லையென்று
காதலை வெறுக்க
உனக்கு மட்டுமே தெரியும்;
காலுறையாய் காதலை கழட்டி எறிய உன்னால் மட்டுமே முடியும்;
நீ
நகரும் படிகளாய்
முன்னேறிச் செல்கிறாய்
என்னை நீங்கி
நான்
நிற்கும் படிகளாய்
நின்று விட்டேன்
உன்னை நெறுங்க முடியாமல்.