கூட்டுக் குடும்பம் -தொடர்கதை
கூட்டுக் குடும்பம் -4
பள்ளி விடுமுறை நாள் ஆதலால் குமரேசன் வீட்டில் வாண்டுகள் துள்ளி திரிந்த வண்ணம் இருந்தனர் .
குமரேசன் அவனது சகோதரி கொஞ்சம் பெரிய பிள்ளைகள் குமரேசன் ஏழாம் வகுப்பும் அவனது சகோதரி மீனா பத்தாம் வகுப்பும் படிப்பவர்கள் .
விடுமுறை நாட்களில் அண்ணன் சதீஷ் மீனா குமரேசன் வீட்டுப் படங்களை முடித்த பின் பெரியவர்களுக்கு உதவி செய்வது வழக்கம் .
அன்று குமரேசன் அவனது நண்பர்கள் வீட்டிற்கு வந்திருப்பதால் உட்கார்ந்து உரையாடி மகிழ்ந்த வண்ணம் இருந்தான் .
பிற்பகல் மணி ஒன்று ஆனது குமரேசனின் தாத்தா பிற்பகல் உணவிற்காக பணியில் இருந்து வீடு திரும்பினார் .
அவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் சதீஷ் வேகமாக சென்று அவருக்கு இருக்கை எடுத்து போட்டு குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான்.
அதுவரை அங்கு விளையாடிக்கொண்டிருந்த நண்டுசிண்டு எல்லாம் அமைதியானார்கள் .
அதை பார்த்த ராஜா ஏன்டா குமரேசா உங்க தாத்தா மிக கடுமையானவரா என்று கேட்டான். அதற்கு குமரேசன் சிரித்து அவர் எங்களுடன் விளையாடுவார் கதை பல சொல்லுவார் ஆனால் அதற்கான சரியான தருணம் இது அல்ல .
அவர் களைப்புடன் இருக்கும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை என் அண்ணாவை பார்த்து நானும் மீனாவும் கற்றுக்கொண்டோம் ...இப்பொழுது மற்ற சிறியவர்களும் எங்களை போன்றே செயல் பட தொடங்கி உள்ளனர் என்றான் பெருமையாக ..அதை கேட்டுக்கொண்டிருந்த சதீஷ் ஆமாம் எல்லா விஷங்களையும் அறிவுரையால் திணிக்க முடியாது ..நாம் அவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக செயல் பட வேண்டும் என்றான் .
...... தொடரும் ....