தூதுவளை

பக்கத்து தெருவில் தான் அம்மாச்சி வீடு.. உடம்பு சரி இல்லா விட்டாலும் அம்மாச்சி வீட்டிற்கு சென்று விடலாம் என்று கிளம்பினால் பெரிய பேத்தி.. "அம்மா நான் அம்மாச்சி வீட்டுக்கு போறேன்." என்று தனது தாயிடம் சொல்லிவிட்டு அந்த மாலை வேலையில் நடந்தாள் அம்மாயி வீட்டிற்கு.....
"கொஞ்சம் கசப்பா தான் இருக்கும்.... அப்புடியே குடிச்சுரு புள்ள".... சளியும் இருமலும் தாங்க முடியாமல் சோர்வாக வந்த பெரிய பேத்தியின் உடல் நலம் கெட்டு விட்டதால் மருந்து ரசம் வைத்துக் கொடுத்தாள் அம்மாயி.. வேலைக்கு சென்று வரும் பேத்தி, தன்னை பார்க்க வராவிட்டாலும் அவளின் உடல் நலத்தில் அந்த கிழவிக்கு ஏனோ அக்கறை அதிகம். வாரத்தில் கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையிலும் அந்த பாசக்கார அம்மாச்சியை பார்க்க பேத்திக்கு நேரம் கிடைக்கவில்லை...

பக்கத்து தெருவில் இருக்கும் அந்தக் கிழவி எபோதும் சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டே இருப்பாள் . எள்ளு உருண்டை , கடலை.. மிட்டாய் என திண் பண்டங்களை பேத்திகளுக்காக வாங்கி வைத்துக் கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் தனது பேத்திகளுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுப்பார் தாத்தா.. அடுத்த நாள்

தனது சின்ன பேத்திக்காக ஐஸ் கிரீம் வாங்கி வைத்துக்கொண்டு அவளைக் கூப்பிட்டாள் பாசம் மிகுந்த அம்மாயி.. நான் சாப்பிட்டேன் அம்மாயி ,எனக்கு ஐஸ் கிரீம் வேண்டாம் என்று சொல்லி விட்டு அம்மாயி வீட்டில் இருந்து கிளம்பினால் சிறியவள்.....
இரண்டு நாட்கள் கழிந்தன..............
அன்று வயக்காட்டு வேலை முடித்து விட்டு கிளம்பிய அந்தக்கிழவியின் கண்களில் பட்டது தூதுவளை செடி.. பெரிய பேத்திக்கு அடிகடி சளி பிடித்துக் கொள்கிறது இந்த தூதுவளை செடி வீட்டில் இருந்தால் பேத்திக்கு மருந்து ரசம் வைத்துக் கொடுக்கலாம் என்று அதனை வேரோடு பிடுங்கி வந்து வீட்டில் நட்டு வைத்தாள் கிழவி......

இரண்டு வாரங்களில் புதிய துளிர் விட்டது தூதுவளை...
தினமும் நீர் ஊற்றி வளர்த்து வந்தாள் செடியை.

வெயிலில் அதிகம் செல்லக்கூடாது என்று அந்தக்கிழவியிடம் மருத்துவர் எச்சரித்திருந்தார்... ஆனாலும் அவள் கேட்டவில்லை............ கறவை மாடுகளை மேய்க்க வெயிலில் செல்லத்தான் வேண்டும் வேறு வழி இல்லை...

அன்றும் அப்படி தான் சென்றாள்..... மயங்கினால் வெயிலில் .. மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவள் உயிர் பிரிந்த்தது ....

தூதுவளை செடி அங்கே பூக்களால் நிரம்பி இருந்தது ... தனது உடல் நலத்தை பற்றி சிறிதும் கவலை படமால் அந்த பாசக்கார அம்மாயி வெயிலில் சென்று பறித்து வந்து உயிர் கொடுத்த தூதுவளை செடிக்கு தண்ணீர் விட்டுக்கொண்டே கண்ணீர் விட்டாள் பெரிய பேத்தி..... அம்மாச்சியை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்ற குற்ற உணர்வில் தூதுவளை முள் குத்தியது அவள் மனதில்...............

.

எழுதியவர் : subashini.p (22-Apr-15, 9:47 pm)
சேர்த்தது : subashini.mpsi
Tanglish : thoothuvalai
பார்வை : 258

மேலே