புத்தகம்
புத்தகம் என் தாய்
என்றும் எனக்கு நிம்மதி தருவதால்!
புத்தகம் என் தந்தை
என்றும் எனக்கு நல்வழி காட்டியதால்!
புத்தகம் என் நண்பன்
என்றும் என் உடன் இருப்பதால்!!
புத்தகம் என் ஆசான்
என்றும் எனக்கு அறிவுரை கூறியதால்!!
புத்தகம் என் காதலி
என் தனிமையின் இனிமையை கெடுப்பதால்!!
புததகம் என் மனைவி
என் தலையணையில் பங்கீடு கேட்பதால்!!
புத்தகம் என் குழந்தை
என் மடியில் அரியணை கொள்வதால்!!
புத்தகம் என்னை மாற்றிப் போட்டது
என் வாழ்க்கையை மாற்றி விட்டது
வரலாற்று நூல் படிக்கையில்- மன்னனாகினேன்!!
காதல் கேதம் படிக்கையில்- காதலனாகினேன்!!
கண்ணீர்க் காவியம் படிக்கையில்- என் கல்
நெஞ்சின் ஓரமும் சற்றூ ஈரமாகியது!!
பொது உடமை சித்தாந்தம்
என்னை தோழனாக்கியது!!
பகுத்தறிவு சித்தாந்தம்
என்னை மனிதனாக்கியது!!
மொத்தத்தில் புத்தகம் என்னை- மனிதனாக்கியது!!
அது இல்லை அவன் இல்லை இல்லை -- "அவள்"
கலைத் தாயின் மூத்த மகள்
அஃறினையில் இருந்து நீக்கி
உயர்-உயர் திணையில் சேர்க்கப் பட வேண்டும்
சிறுவயதில் நம் மயிலிறகின் கூடாரமாய் இருந்தவள்
நம் இதய கூடாரத்தில் நுழைய வேண்டும்!!
தோழர்களே புத்தகம் புரட்டுங்கள்
உலகின் புதுமையை உணருங்கள்!!
-"தமிழன்" பிரபாகரன்