எனக்கெனவே நீயும்
உன் நிழலில்
உட்கார்ந்திருந்தேன்
என் ஆயுள் கூடுதடி
உன் உயிரில்
உறைந்திருந்தேன்
அது நூறுஜென்மம் ஆகுதடி
உன் தெருப்பக்கம் இருந்தால் -தினம் தினம்
எனைத்தாண்டி செல்கிறாய்
உன் மனப்பக்கம் இருந்தால் -கணம் கணம்
நினைவாலே அணைக்கிறாய்
என் காதலுக்கு
உன் உயிரை கொடுத்தாய்
என் கவிதைகளுக்கு
உன் ஆயுள் கொடுத்தாய்
என்னை மறுஜென்மம்
எடுக்க வைத்தாய்
எத்தனை முறை நான் பிறந்தாலும்
எனக்கெனவே நீயும் பிறக்கின்றாய்