அது ஒரு சுகம்
என் விழியில் உன்னைக்கண்டால்
அது ஒரு சுகம்
என் வார்த்தை உன் பெயரானால்
அது ஒரு சுகம்
என் நிழலில் நீ தெரிந்தால்
அது ஒரு சுகம்
என் நினைவில் நீ மலர்ந்தால்
அது ஒரு சுகம்
என் கனவில் நீ பிறந்தால்
அது ஒரு சுகம்
என் மார்பில் நீ தூங்கினால்
அது ஒரு சுகம்
என் மடியில் நீ தவழ்ந்தால்
அது ஒரு சுகம்
உன் கூந்தலில் நான் பூவானால்
அது ஒரு சுகம்
உன் கொலுசில் நான் இசையானால்
அது ஒரு சுகம்
என் எழுத்தில் நீ கவியானால்
அது ஒரு சுகம்
என் உயிரில் நீ கலந்தால்
அது ஒரு சுகம்
உன் மூச்சில் நான் வாழ்ந்தால்
அது ஒரு சுகம்
மொத்தத்தில்
என் உறவில் நீ புகுந்தால்
அது பல சுகம்