எழுந்து பார்

உனக்காக நீ தூங்கலாம்
மற்றவருக்காய் உன் உளம்
எப்பொதும் திறந்தே இருக்கட்டும்!
மார்தட்டி வீரம் பேசலாம்
மற்றவரின் வயிற்றிலடித்து
அதை சாதிக்க நினைக்காதே!
எழுந்து பார்
விழுந்தவர் எழுவதற்கு
துணையாய் இருந்து பார்!
அழு நன்றாய் அழு
மனிதம் வாழ
இறையிடத்தில் கையேந்தி அழு!
உன்னிலை சிந்தி
இச் சமூகத்திற்காய் நீ
தீயாய் எழுந்து ஜொலித்ததுண்டா?