அம்மா

முதல் நாள் கல்லூரி
புத்தகம் வாங்க சென்றேன்
பாடவாரியாக ஆறு புத்தகங்கள்
வாங்கி கொண்டு புறப்பட்டேன்
பேரூந்தில் .....!
ஒரு மணி நேர பயணமது
உட்கார இடம் கிடைக்கவில்லை!
சோர்ந்து போனேன்
ஆறு புத்தகங்களை ஒரு மணி நேரம் கூட
சுமக்க முடியவில்லை
அன்னையே ஈரைந்து மாதங்கள் எப்படி தான்
பொறுமை காத்தாயோ ?
வியக்கிறேன் உன்னை கண்டு
வணங்குகிறேன் உன் தாய்மையை !