எது காதல்......?
உப்பும்நீருமாய்...
உடல்கள்
உணர்ச்சிகளில்
கரைவது
காமம்....
பாலும்நீருமாய்.....
உள்ளங்கள்
உணர்வோடு
கலப்பது
காதல்....
எனக்காய்
நீ காத்திருப்பதோ....
சுகம்
உனக்காய்
நான் காத்திருப்பதோ...
தவம்
காதல் .....சுகமான தவம்...!!!