மழையென்பது யாதென‌

வெண்மேகம் மறைந்து
கருமேகம் சூழ‌

கானகத்து மயில்
தனை மறந்து ஆட‌

தூரத்து மண்வாசம்
நாசியெல்லாம் இழுக்க‌

விழுந்த மழைத்துளியால்
விவசாயி மனம் குளிர‌

குழந்தை முதல் குமரி வரை
கும்மாளம் தானே வர‌

வாடிய செடி எல்லாம்
முகம் மலர்ந்து சிரித்திரிக்க‌

நடை பயிற்சிக்கு சென்ற‌
தாத்தா பாட்டி
கையில் குடையிருந்தும்
எடுத்து விரிக்க மறந்ததேனோ...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (26-Apr-15, 10:26 pm)
பார்வை : 234

மேலே