மதியின் சலனம்
எத்துனை, எத்துனை மின்னல்கள்
ஓ அத்துனையும்
எண்ணங்களோ?
எத்துனை, எத்துனை ஓசைகள்
ஓ அத்துனையும்
ஆசைகளோ?
எத்துனை, எத்துனை சீற்றங்கள்
ஓ அத்துனையும்
சிந்தனைகளோ?
எத்துனை, எத்துனை காவியங்கள்
ஓ அத்துனையும்
கற்பனைகளோ?
எத்துனை, எத்துனை கலைகள்
ஓ அத்துனையும்
கனவுகளோ?
எத்துனை, எத்துனை புதையல்கள்
ஓ அத்துனையும்
எதிர்பார்புகளோ?
என்ன, என்ன இந்த வண்ணம்?
ஆமாம், ஆமாம்
இது மதியின் சலனம்