கவியவளின் கன்னத்தோடு - 5 - தேன்மொழியன்

கவியவளின் கன்னத்தோடு - 5
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கதவிற்கு நேரேதிராய்
மதில்மேலமர்ந்து
காலசைக்கும்
கவிதையாய் நீ மாற ..
உனக்கு நேரெதிராய்
நின்ற என்னுள் ..
எத்தனை வரிகளை
வாசித்து ரசித்தாய் ...?

தினமும் திசைமாறி
தென்றலை துரத்தும்
அந்த சுழல் காற்றுக்கும் ..
நொடியில் எனை வாரி
அடிமனதை அழுத்தும்
உந்தன் பின் நடைக்கும்..
பருவ ஒற்றுமையோ ..?

உன் இரு கை ஏந்திய
மொட்டுகளின் மோதலில்
எண்ணற்ற வண்ணத்தில்
எத்தனை பூக்கள் பூத்தன ...?

விரும்பாத நட்பையோ
வெறுபேற்றும் உறவையோ
ஒரே வார்த்தையில்
ஓங்கி அறையும்
அற்புத கலையை
எப்போது கற்றாய் ...?


- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (27-Apr-15, 4:27 pm)
பார்வை : 83

மேலே