கவியவளின் கன்னத்தோடு - 8 - தேன்மொழியன்

கவியவளின் கன்னத்தோடு - 8
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலப்பெண் கணிதத்தை
இருள் விரட்டி நீ படித்திட ..
வர்கத்தின் கர்வமெல்லாம்
திருத்திய தீர்வில் திரளுதடி ..!
கனவின் காலடிகளை
படியின் முகத்தில் நீ வரைய
பென்சிலின் பெருமையெல்லாம்
உடைந்த உருவத்தில் மடிந்ததடி ..!
வேதியல் வினைகளில்
நெல்லிச் சுவையை நீ கலக்க
குடுவையின் குரல்களெல்லாம்
குற்ற உணர்வில் கதறுதடி ...!
குறிஞ்சிப் பாடலின் ஆழத்தில்
தேனருவி சாரலை நீ தெளிக்க
அமுதமொழியின் அர்த்தமெல்லாம்
ஆர்வ மிகுதியில் அழிந்ததடி ..!
- தேன்மொழியன்
நாளை பிறந்த நாள் காணும் அவளுக்கென ...