அதற்காகவேனும் -கார்த்திகா
ஆயிற்று ...
இன்றோடு பதினெட்டு வருடங்கள்
இருபதில் தொடங்கியவை ..
ஒவ்வொரு பிறந்த தினத்திலும்
வயதின் எண்ணிக்கை
ஒவ்வொன்றாய்க் குறைந்து
மீண்டும் கருக் கொண்டால்,
நிச்சயம்
மகிழ் சூல் கொள்வேன்...
பாழும் காதலனால்
பலபேரின் இரைக்காக
விற்கப்பட்டு நான் சீரழிந்த
ஞாபகத்தை கருவிலேயே
கொன்றிருப்பாள் என் தாய்.......
அதற்காகவேனும்
என் மரணம் ஜனிக்க வேண்டும்
மீண்டும் ஒருமுறை!!