வாழ்க்கை

அரிசிமாக் கோலத்தை சுற்றி
அரைவட்டமாய் குருவிகள்
ஆட்டின்மீது பயணம் செய்யும்
அண்டங் காக்கைகள்
கடித்து விளையாடும்
நாய் குட்டிகள்
அடர்ந்த மரத்திலிருந்து
வெள்ளைப் பூச்சொரியல்
கையில் கம்புடன் தெருவோரம் செல்லும்
ஒற்றைக் கண் தாத்தா
பட படவென வந்த ட்ராக்டர்
புழுதியை இறைத்து
அத்தனையையும் புறந்தள்ளியது
வளர்ச்சியின் வேகத்தில்
வாழ்க்கையையும் தான்

எழுதியவர் : கொ.வை. அரங்கநாதன் (30-Apr-15, 7:48 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 118

மேலே