முகத்தில் உமிழ்ந்திடடா

முகத்தில் உமிழ்ந்திடடா

முகத்தில் உமிழ்ந்திடடா...!

உழைப்பே...!
தன் -
மூலதனம்...!
என வாழ்கின்ற
ஏழையர்க்காய்...

ஏங்கல்ஸ்..!
நட்பால்....
காரல்மார்சு..!
உழைப்பினிலே...
விளைந்ததடா
மூலதனம்....!

அந்த -
மூலதனமே...!
லெனின்..!
மூளையின் -
தனம் ஆகி...
முளைத் தெழுந்த
வர்க்கக் கிளர்ச்சியடா...!
மே திங்கள் புரட்சியடா...!

உழைப்பின் -
உண்மை தனை...
உன்னத பாங்குதனை...
உழைப்போர் கூடி
ஒன்றாய் ஓங்கி
உரைத்திடவே...
உருவான உலகமடா...!
உழைப்பவர் இயக்கமடா...!

கொள்கை -
கொடிபிடித்து....
கோமான் இல்லாத
குடிவாழ்வை...!
கொணர்வோம் மென
கோமான் ஆகின்ற
கொடியோரை கண்டிடடா...!
அவர் கொட்டம் அழித்திட்டா...!

உழைப்பாளர் -
உழைப்பை யினி...
உறிஞ்ச -
ஒருவரில்லை....
இதில் -
பிழைப்பு ...
நடத்துவோரை....
மோதி மிதித்திடடா...
முகத்தில் உமிழ்ந்திடடா...!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (1-May-15, 1:54 am)
பார்வை : 449

மேலே