முரண்கள்

முரண்களால் மட்டுமே ஆன
வாழ்க்கைக்கு விளக்கம் அறிந்தவர் யார்..?

நேற்றுப் பிடித்தது ..இன்று சலித்து
நாளை பிடிக்காமலே போவது ஏன்..?

அன்று வெறுத்தது.. இன்று இணைந்து
நாளை உயிராகவே மாறுவது ஏன்..?

பகலுக்கு எதிராய்..இரவு என்று
ஒளியும் இருளும் இருப்பது ஏன்?

மேடு பள்ளம்..ஏற்றம் இறக்கம்
வாழ்வினில் மாறியே வருவது ஏன்?

நேர்மை நீதி .. கபடம் சூது
மனிதருள் ஒன்றாய் இல்லாதது ஏன்?

எங்கும் எதிலும்.. இயக்கம் நடக்க
எதிர்மறை சக்திகள் ..இரண்டும் வேண்டும்!

அணுவில் கூட இதுவே இருப்பதும்
அண்டம் யாவிலும் இதுவே நிறைந்ததும்
புரிந்திட விளங்குமே ..புதிரும் அவிழுமே
முரண்கள் இல்லையேல் ..இயங்குதல் இல்லையே !

எதிர்மறை எண்ணங்கள் இருப்பது நன்மையே
பாங்குடன் இருந்தால் விளைவது வளர்ச்சியே !

எழுதியவர் : கருணா (1-May-15, 8:07 pm)
பார்வை : 76

மேலே