நிதானம் தேவை
நீர்க்குமிழிகளை உடைக்க விளையாட்டாய்
விரல் நீட்டும் பொழுதும் ஒரு சனமேனும்
நிறுத்தி நிதானம் காட்டும் நபர்கள் நம்மில்
அதிர்ஷ்டசாலிகள் அறிவுஜீவிகள் ஏனெனில்
சாமானியர்கள் சராசரி வாழ்வில் மதியின்
அதிவேகத்தில் சந்திக்கும் சோதனைகள்
சங்கடங்கள் சதியுமில்லை விதியுமில்லை
நிதானம் தவறுவதே என்று உணர்ந்து நடப்பார்