அவள் பெயர் சாரா
கதையின் நாயகன் :
கண்ணன்
கதையின் நாயகி :
சாரா
என் பெயர் கண்ணன், எல்லாரோட வாழ்க்கைலையும் கண்டிப்பா ஒரு காதலாவது இருக்கும். அதே மாதிரி தான், என்னோட வாழ்க்கைலையும் ஒரு காதல் இருந்துச்சு. அவ பேர் சாரா , ரொம்ப அழகா இருப்பா , அன்பா பேசுவா, அழகா சிரிப்பா , கோபபடமாட்டா, யாரோட மனசும் புண்படுர மாதிரி பேசமாட்டா, அவளுக்கு தனிமையில இருக்க ரொம்ப பிடிக்கும் எப்பயுமே கவித எழுதிகிட்டு தமிழோட மட்டுமே பேசிகி்ட்டே இருப்பா. அவ இப்படி இருக்குரதுக்கு காரணமே அவளுக்கு யாரும் இல்லன்றது தா.
ஒரு அனாத ஆசிரமத்துலதா வளர்ந்தா , 12 வரைக்கும் அவங்க துணையோடுதா படிச்சா . என் காலேஜ்ல தா அவள முத தடவப் பார்த்தேன் திரு திருனு முழிச்சிட்டு அப்ளிகேசன் பார்ம் பிள் பண்ணிட்டு இருந்தா. அந்த இடத்துல நீ என்னடா பண்ணிட்டு இருந்தனு கேட்குரிங்களா. சொல்ரேன். நானும் அவள மாதிரிதா திரு திருனு முழிச்சிட்டு அப்ளிகேசன் பார்ம் பிள் பண்ணிட்டு இருந்தேன். அப்புரம் பார்ம் பிள் பண்ணி கொடுத்துட்டு அவ போயிட்டா. ஒரு சின்ன ஏக்கம் எனக்குள்ள அவள திரும்ப எப்ப பார்க்கிரதுனு.
அப்புற கொஞ்ச நாள காலேஜ் ஓபன் பண்ணிட்டாங்கா மறுபடியும் அவளப் பார்த்தேன் என்னோட வகுப்பறையிலேயே. அப்புரம் அவ கூட பேசி பழக ஆரம்பிச்சேன். ஓர் நாள் என்னோட காதல சொன்னேன். அவளும் என்ன ஏத்துகிட்டா. அப்புரம் , எல்லாரோட காதல் மாதிரி எங்களோட காதல் வாழ்க்கையும் தொடங்குச்சு. எப்பயுமே காதல்ல பெண்கள்தா அடிக்கடி கோப படுவாங்க, பேசமா தவிக்க விடுவாங்க .
ஆனா என்னோட காதல்ல அப்படியே தல கீழா இருந்துச்சு. நான்தா அடிக்கடி கோப படுவேன். அவ கூட பேசமா அவள தவிக்க விடுவேன். ஆனா நான் எவ்வளவு பண்ணலும் என் மேல கோப படவோ, வெறுத்து பேசவோ மாட்டா. அதயே நான் அட்வான்டேஜா எடுத்துகிட்டு அவ கூட ரொம்ப விளையாடுவேன். இப்படி நான் பண்ண சின்ன சின்ன விளையாட்டலா தாண்டி ஒரு நாள் ஒரு பெரிய நாடகத்தையே நடத்துனே. அது என்ன நாடகம்னா. நான் திடிர்னு எதிரபாரமா ஒரு விபத்துல இறந்திட்டுதா என் நண்பனவிட்டு அவகிட்ட சொல்ல சொன்னேன். என் நண்பன் அப்பிடி செய்ய மாட்டேன் அவ தாங்கமாட்டானு எவ்வளவோ சொன்னா. நான் கேட்கள ஒருவழியா அவன சமாதனபடித்தி அவ கிட்ட சொல்ல வச்சுட்டேன். அத கேட்டு அவ அழுதுகிட்டே வந்தான்.
அவ கண்ல இருந்து வர கண்ணீர் துளிகள்னால என் மனசு முழுசா கரஞ்சு போயிர்ச்சு.அந்த நொடிதா நான் புரிஞ்சுகிட்டேன். அவ என்மேல எவ்வளவு அன்பு வச்சுருக்கானு. ஒடி போய் அவள கட்டி பிடிச்சு. I m so sorry di. நீ என் மேல இவ்வளவு அன்பு வச்சிருப்பேனு தெரியாம பண்ணிட்டேன்டினு சொல்லி அழுதேன். ஆனா அவ பேசவே இல்ல அர மணி நேரத்துக்கு மௌனமாவே இருந்தா. இப்ப கூட என் மேல உனக்கு கோபம் வல்லயாடினு கேட்டேன். அப்ப கூட நான் அழுகுரது தாங்க முடியாம தா வாய் திறந்து பேசுனா.
டேய் நான் உன்ன லவ் பண்ரேன் டா லவ்.லவ்க்கு உண்மையான அர்த்தம் தெரியுமா கண்ணா உனக்கு.உன்ன சொல்லி என்ன பண்ரது இப்பலா என்ன அவ ஏமாத்திட்டா,இவ ஏமாத்திட்டானு, ஆண்கள் கதறலா தான இருக்கு எங்க பார்த்தலாம். ஆன நீ என்ன புரிஞ்சுக்கிட்டே இப்படி பண்ண பார்த்தியா அத நினச்சாதா டா செல்லம் மனசு ரொம்ப வலிக்குது. நாம பழகுன இந்ந ரெண்டு வருஷத்துல என்னோட அனுமதி இல்லாமா என் மேல விழுந்த தூச தட்டி விட கூட உன் விரல் என் மேல பட்டது இல்லடா. நீ மட்டும் அந்த சில ஆண்கள் பட்டியல்ல இல்லாதப்ப நான் மட்டும் எப்டி டா அந்த சில பெண்கள் பட்டியல்ல இருப்பேன். நீ இறந்துட்டனு கேள்வி பட்ட உடனே நானும் செத்ராலனுதா விஷ பாட்ல கையில எடுத்தேன். ஆனா கடைசியா உன் முகத்த பார்த்துட்டு உன் கிட்ட வாரென்டானு சொல்லிட்டு வரலாம்னுதா இங்க வந்தேன். ஆனா இங்க வந்து பார்த்தா எல்லாமே பொய்ன்ர. இப்ப கூட எனக்கு உன் மேல கோவம்லா இல்லடா. என்ன எப்பயும் நீ என் கூட விளாயாடுவ அதுல இது ஒன்னு அவ்ளதான்.
ஆ! என்ன திட்டவே மாட்டயானு கேட்டேல . நான் எப்டிரா உன்ன திட்டுவேன். எனக்கு யாரு இருக்கானு அழுதே கழிச்சுட்டு இருந்ந என் வாழ்க்கையில எனக்கு முதல கெடச்ச சொந்தமே நீ தானடா. உன்ன எபடி டா என்னால வெறுத்து பேச முடியும்னு. சொல்லி அழுதா அந்த நிமிஷமே செத்ராலா போல இருந்துச்சு. அவ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்ன. சிந்திக்க வச்சுச்சு. எனக்கு இப்படியொரு பொன்ன வாழ்க்க துணையா அமச்சு குடுத்ததுதக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு அங்கிருந்து என் சாராவ கூட்டிட்டு வந்துட்டேன்.
அப்பரம் கொஞ்ச நாள்ல எனக்கு சாராக்கு கல்யான் ஆச்சு இப்ப நாங்க சந்தோஷமா இருக்கோம். இப்பலா நான் அவ மேல கோப படுரதே இல்ல. அவ முன்ன காட்ன அன்ப விட இப்ப அதிகமவே என் மேல பாசமா இருக்கா. இதெல்லாம் நான் ஏன் சொல்ரேனா . சில ஆண்கள் பெண்கள்னாலே இப்படிதான்னு நினச்சுட்டு இருக்காங்க இல்லங்க என் சாரா மாதிரி அன்பான பொன்னுங்களும் இருக்காங்க. எனக்கு என் சாரா கெடச்ச மாதிரி உங்களுக்கும் ஒரு நல்ல பொன்னு கெடப்பா. நீங்க நல்லவராவும், உண்மையானவரவும் இருந்தா.
--------------------------------------------------------------------------
கருத்து.............
--------------------------------------------------------------------------
காதலை சோதிப்பதில் ஒன்றும் தவறில்லை
அது உண்மையென அறிந்த பின்னும் சோதிப்பது தான் தவறு
சந்தேகம் இல்லாத காதலே சாலச் சிறந்தது.