புயலுக்கு பூ கொடுத்தேன் - தேன்மொழியன்
புயலுக்கு பூ கொடுத்தேன் ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடல்மிதைவையை மிதித்து
கண்களால் மிரட்டி
மூழ்கச் சொன்னேன்
----மூச்சு காற்றில் ..
மீன்களைப் பிடித்து
மீசைகள் கிழித்து
மிதக்கச் சொன்னேன்
----இதழின் அசைவில் ..
சுழலினை சுருட்டி
பற்களால் கடித்து
பறக்க வைத்தேன்
---இதய உணர்வில் ..
துறைமுகத்தை தூக்கிலிட்டு
கப்பலை கடத்தி
விண்ணில் வீசினேன்
----விழியின் ரசனையில் ..
படகினை அழைத்து
பார்வையால் சிதைத்து
அலையில் துவைத்தேன்
----கவிதை தாளில் ..
கரையினை இழுத்து
விழிநீரில் கரைத்து
திகட்ட வைத்தேன்
----எழுத்தின் வடிவில் ..
வானிலையை வழிமறித்து
வார்த்தையால் உடைத்து
புயலுக்கு பூ கொடுத்தேன்
----கற்பனை தேடலில் ..
- தேன்மொழியன்