தேடித் தவிக்கிறேன்
உன் நிழலைத்தான்
என்னுள் தேடித்தவிக்கிறேன்;
உன் மௌனப்பார்வைகளை
மொழி பெயர்க்க ,
காதல் நூலகத்தில்
தவம் கிடக்கிறேன் ;
சீரிய சுனாமி
நொடி நின்றதைப்போல,
தூரிகை கண்களால்
திகிலூட்டுகிராய் ;
விழிகள் விடைபெறும்போது,
நெற்றிக்கு
இதயம் இடம்பெயருகிறது ;
ஐ மிஸ் யூ என்று
சொல்லத் தெரியாமல்தான்
விழி ததும்பி நிற்கிறேன்.