மருக்கான் - 1
பாழுமு லகிலெனை
பத்துத் திங்களுன் மணிவயிற்றில்
வைத்துப் பெற்ற என்னை
எப்படி நீ தொலைத்தாய் ..
அம்மா..
பிள்ளைப் பிராயத்தினில்
பிள்ளையார் கோவிலதில்
கிடந்த என்னை
எவரெவரோ வளர்த்தார் ..
யாருமெனை நாட்படவே
கூடவே வைத்ததில்லை..
ஓடியே நானுமோர்
நாயினைப் போலவே
எங்கெங்கும் சுற்றியலைந்தேன் ..
கோவிலில் ஒரு வேளை..
வீதியில் பல வேளை..
என்று பசியாறி வளர்ந்தேன் ..
கால்கள் சூம்பின பாவியாய்
காலம் முழுதுமே..
இங்குமங்கும் திரிந்தேன் ..
ஊர் ஊராய் தேடி அலைந்தேன்..
உன்னை..
தெரியாத போதிலும் நான்..
....என் பேரு மருக்கான்
....என்றழைப்பார் ஊரிலுள்ளார் !
(தொடரும்)