காலமெல்லாம் வாழ்ந்திடுவேன்

மெய்யான
என் காதல்
பொய்யாகி
போனதுவோ
இதயத்தின்
வலிதனை
நீ
அறிந்திட
நான்
உரைத்ததில்லை


தாய் மீது
நான்
கொண்ட
ஆறாத
அன்புதனை
உன்மீது
நான்
கொண்டே
காலமெல்லாம்
வாழ்ந்திடுவேன்


மெய்யோட
மெய் சேர்ந்து
மெய்யின்பம்
காணவேண்டும்
உன்
மடி மீது
தலை வைத்து
என்
உயிரும்
போகவேண்டும்

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (2-May-15, 11:22 pm)
பார்வை : 111
மேலே