பல சக்கரங்களுடன் நகர

நெடுந்தூரப் பயணம்
சொகுசாக சிலர்
படிக்கட்டு
பாதைகளில்
நெரிசலில் பலர்
இறங்குவதும் ஏறுவதும்
தவறுதலின்றி நடக்க
வண்டி போய்ச் சேரும்
ஊர் எது என
முன் சென்று பார்த்த போது
ஓட்டுனரே இல்லை
பூமிக்கு.....
ஆச்சரியத்தில்
அண்ணாந்து வாய் பிளக்க....
இன்னொரு அதிசயம்
மிகப் பெரிய வாகனம்
பல சக்கரங்களுடன் நகர...
அதில் ஒன்றாக
பூமியும் இருக்க
அதிர்ந்தேன்
மறைந்தேன்
நான்....