மழையென்பது யாதென-------------------நிஷா

இடியோசை என் இதயத்துடிப்பை
இருமடங்காய் அதிகரிக்க
இதழோரம் சிறு தூறல் வந்தமர்ந்து
இனிக்கின்ற மொழியாலே என்னோடு பேச
அழகான மாலையிலே என்னை
ஆட்கொள்ளும் குளிர்காற்றோடு
அருவியாய் கொட்டிதீர்க்கும் உன்
அழகு முகம் சொல்வதென்ன என்னோடு...
விடியாதா எனதேடும் விவசாயி மனம் குளிர
வந்தாயோ வசந்தம் தந்தாயோ
விரல் பிடித்து விளையாடும் மழலை
விண்ணை பார்த்து சிரித்திடவே
காகித கப்பல் விட்டு களித்திடவே
காதலுடன் பூமிக்கு வந்துவிட்டாய்
காற்றோடு நீ கொண்ட சிநேகம் என்மீது
கவிதையாய் மோதுதம்மா.....
இலைமீது நீ சிரிக்கும் அழகை
தலைவுயர்த்தி ரசிக்கின்றேன் நானும்
பூமிக்கு நீ ஒரு வரமாய் ஆனாய்
புன்னைகையோடு சேமிக்கிறோம் உன்னையே நாங்கள்.....
நிஷா