காவியமானவள்-பகுதி2

அப்புறம் ஆன்டி நல்ல மதிப்பெண் எடுத்து தமிழினி பாஸ் பண்ணிருக்கு என்ன படிக்க வைக்க போறிங்க இன்ஜினியருக்கா இல்ல டீச்சருக்கா என ஆனந்த் கேட்க அவள் என்ன விருப்பப்படுகிறாளோ அதே படிக்கட்டும் ஆனந்த் என பதிலளிக்க,
பள்ளியை அடைந்தனர் இருவரும்...
சுமார் இருநூரு மாணவ மாணவியருக்கு மத்தியில் இருந்த தமிழினி தன் அம்மாவின் வரவை விநாடியில் அறிந்தால்...
தந்தையிலா குறையை என்னாலும் உணர விடாதவள் பரிசத்தில் ஏந்தி தாளாட்டி சீராட்டி வளர்த்தவள் ஆயிற்றே அன்னையின் வாசம் அறியாது இருப்பாளா???
ஓடோடி வந்து அம்மா நான்தான் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் என கட்டி தழுவினாள் தமிழினி சொல்ல வார்த்தையின்றி முத்த மழை பொழிந்து பாச மழையில் நனைத்தாள் தமிழினியின் அம்மா...
இருவரின் அன்பையும் பார்த்து சக பெற்றோரும் ஆசிரிய பெருமக்களும் ஓர் விநாடி கண் கழங்கிபோனர்...
தமிழினியையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த கதிர் மற்றும் பிரியா இருவரையும் தனது பெற்றோருடன் தலைமை ஆசிரியர் தனியாக அழைத்தார்...
தமிழினி அம்மாவை அழைத்துக்கொண்டு ஆனந்தையும் உடன் அழைத்தாள் ஆனால் ஆனந்த் மறுத்து இங்கேயே நிற்க்கிறேன் நீங்கள் பார்த்துவாருங்கள் எனச்சொல்ல இருவரும் தலைமை ஆசிரியரை
பார்க்க அறைக்கு சென்றனர்...
தமிழினி,
கதிர் மற்றும் ப்ரியா இருவருக்கும் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டாள் அவர்களும் பதிலுக்கு மலர் கொடுத்து தமிழினியை வாழ்த்தினர்...
தலைமை ஆசிரியர் மூன்று பேருக்கும் அறிவித்திருந்தவாறு முதல் பரிசு ஐம்பதாயிரம்,
இரண்டாம் பரிசு முப்பதாயிரம்,
மூன்றாம் பரிசு இருபதாயிரத்தையும் விரைவில் விழா ஏற்ப்பாடு செய்து தருவதாக உறுதியளிக்க அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்...
அதுமட்டுமின்றி நமது நாமக்கல் மாவட்டத்தில் தலைசிறந்த தனியார் கல்லூரியில் நான்கு வருடமும் இலவசமாக படிக்க ஏற்ப்பாடு செய்வதாகவும் கூறினார் கதிரும்,ப்ரியாவும் மறுப்பேதுமின்றி தலையசைத்தனர்,
தமிழினி மெல்லய குரலில் ஐயா...
என்றாள்,
சொல் தமிழ்
நீ அழைப்பதை பார்த்தால் விருப்பம் இல்லாதது போல் தெரிகிறதே என்ன படிக்க விரும்புகிறாய் என தலமையாசிரியர் கேட்க...
மன்னிச்சிடுங்க ஐயா எனக்க தொழிற்நுட்பவியல் படிக்க ஆர்வம் இல்லை அதுமட்டுமின்றி முதல் வகுப்பு முதல் மேல்நிலை கல்வி வரை என் அறிவை வளர்த்தது அரசு பள்ளி தான் என் கண்களை கல்வி ஒளிபெறச்செய்தது எனதருமை ஆசிரியர்களே அவர்களுக்கும்,அரசிற்க்கும் பெருமை சேர்ப்பது என் கடமை ஆதலால் நான் ஒரு அரசு கல்லூரியில் தான் பயில விரும்புகிறேன் அதுவும் என் தாய்மொழி தமிழையே முதல்பாடமொழியாக கொண்டு பயில விரும்புகிறேன் என சுரீரென சொன்னாள் தமிழினி...
தலைமையாசிரியர் ஓர்விநாடி மெய்சிலிர்த்து நின்றார்...
நன்று தமிழ் உன் ஆசை மிகச்சிறந்தது தான் படித்து கை நிறைய சம்பாறிக்க வேண்டும் என நினைக்கும் பலருக்கு மத்தியில் அரசிற்க்கும்,ஆசிரியருக்கும் மதிப்பளித்து பெருமை சேர்க்க நினைக்கும் நீ கண்டிப்பாக பெரிய நிலைக்கு வருவாய் வான் போற்ற வளர்வாய் என ஆசிர்வதித்ததை பார்த்து தமிழினியின் அம்மாவும்,
சக தோழரும் மகிழ்ந்தனர்...
மிக்க நன்றி ஐயா என விடைபெற முனைகையில் கல்லூரி சேர்க்கை சமந்தமாக என்ன உதவி வேண்டுமானாலும் அழையுங்கள் என தனது அலைபேசி எண் தந்து உதவினார்
தலைமை ஆசிரியர்,
உடன் தனது வகுப்பாசிரியர் மற்றும் அனைவரும் வாழ்த்து தெரிவித்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்...மகள் தமிழினியின் கைகளை பிடித்தவாறே வெளியேறினாள் தமிழரசி...
இருவருக்காகவும் மரத்தடியில் ஒற்றை காலை மரத்தில் முட்டகொடுத்து ஒய்யாரமாக நின்றிருந்த ஆனந்த் தமிழினியை பார்த்து மெல்ல புண்ணகைத்தான்...
அவளும் செவ்விதழ் மலர்ந்தாள்...
அருகில் மெல்ல நடந்து என்ன ஆனந்த் நல்லா சைட் அடுச்சயா என கேளி செய்தாள் ஆனந்தை பார்த்து...
தமிழ் ஆனந்த் நல்ல பையனாச்சே சைட்டெல்லாம் அடிக்றானா என அம்மா கேட்க மெல்லச் சிரித்துவிட்டாள் தமிழினி...
நீ அறிந்தது அவளவு தான் அம்மா என தமிழினி சொல்ல
வேணாம் தமிழ் வேணாம் வலிக்குது அலுதுறுவேன் என சிலேடையில் நகைக்க சிரித்துக்கொண்டே வீதியை அடைந்தனர் மூவரும் சரி ஆண்டி வீட்டிற்க்கு போய்ட்டு வருகிறேன் கேசரி சமைத்து வையுங்கள் என ஆசையோடு ஆனந்த் கேட்க நீ வாடா உனக்கு பிடித்த பால்பாயசமே என் கையாள செஞ்சு தரேன் என அழைப்பு விடுத்தாள் தமிழினி...
அய்யோ உன் கையாளயா
சரி எப்படியும் இன்னைக்கு வாந்தி எடுக்க போறது உறுதி என ஏளனம் செய்ய
பாருங்க அம்மா என்னை கிண்டல் பன்ட்றான் என்றாள் தமிழினி...
என்ன ஆனந்த் ஒரு நாள் சாப்ட போறதுக்கே நீ இப்டி சொல்றயே இத்தனை நாள் நான் என்ன ஆகிருப்பேன் என நினைத்துப் பார்த்தயா...
ஆமா,ஆண்டி கொஞ்சம் கஸ்ட்டம் தான் என ஆனந்தும் தமிழினியின் அன்னையும் மாறி மாறி கிண்டல் செய்தனர்...
வாங்க இண்ணைக்கு ரெண்டு பேருக்கும் சர்க்கரைக்கு பதில் உப்பு போட்டு தருகிறேன் என பொய்யுரைக்க ஐயயோ ஆளை விடுங்க அம்மா என
நடையில் வேகமெடுத்தான் ஆனந்த்...
தமிழரசியும்,தமிழினியும் வீட்டை அடைந்தனர்
இன்ப அதிர்ச்சி காத்திருந்தது
வீட்டில்...
என்ன அது ஆவல் குறையாமல் தொடர்ந்து படியுங்கள்...
-காவியமாவாள்

எழுதியவர் : கிருபானந்த் (4-May-15, 8:07 pm)
பார்வை : 267

மேலே