தையற்காரர்
நாம் போனால் வாங்க...
என வியர்வையோடு
எட்டி பார்க்கும்
உடல்..
அந்த குடோனில்...
கோடைக் காலத்திலேயே பெரும்பாலும்
அவர் பள்ளிக்கு
வேலை நாட்கள்.....
சில தேவதைகளின் உடைகள் என்றும்
அவர் கைபடாமல் உருவானது
இல்லை......
உணவு
இடைவெளிகளில்
சிறு பொத்தான்களோடு புரண்டு படுக்கும்
அவர் தூக்கம்.......
அம்மாவுக்கும்,
தங்கைக்கும்
எப்படியும்
ஒரு கைக்குட்டை பரிசளித்து விடுவார் பிறந்தநாளுக்கு.......
எத்துணை
பெரிய வாழ்க்கை கிழிசலை
அவர் தைத்துக்
கொண்டே
இருக்கிறார்
கனவிலும் ....