நீங்க சொல்லுறது சரிதானுங்க
பண்டிக நெருங்குது
ரெண்டு சொக்காவ வாங்கிக்க.
பொண்டாட்டிய அழச்சிட்டு
புது சினிமாக்கு போயிக்க.
வெரசா போயி முக்கு கடையில
வாங்குன கடன் அடச்சிக்க.
என்னைக்காவது ஒம்புள்ளைக்கு
வாசன பவுடர் போட்டுரிக்கியா டே
இந்தா வச்சிக்கனு அவுக
கையில திணிச்சப்போ....
ஓட்டுக்கு காசான்னு
நட்டுக்கிட்டு வந்த ரோசம்
பொத்திக்கிட்டு படுத்ததய்யா.
கொஞ்ச நாளு
எங்க வீட்டு கஷ்டம் தீர்க்க
அஞ்சு வருசம்
மொத்த ஊர அடகு வச்சோம்
போன பஞ்சாயத்து
எலக்சனுல..
--கனா காண்பவன்