அன்னையர் தின நல்வாழ்த்துகள்

அன்பினில் உலகை ஆளும் சக்தி .
உன்னிடம் தினமும் உள்ளம் சேர
வந்திடும் பிணிகளை வருமுன் காத்து
தந்திடும் வரங்களைத் தரவே வந்து
கண்முன் நின்று காவியம் படைக்கும்
பெண்ணே உன்றனின் பெருமை கண்டு
என்னுள் நீயே என்றதோர் உணர்வில்
அன்னை உன்னை ஆண்டவன் அளித்த
அற்புதம் நிறைந்தவள் ;அகிலமும் நினைக்கும்
கற்பனை இலாத காணும் தெய்வமே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-May-15, 8:12 am)
பார்வை : 245

மேலே