என் அன்னைக்கு
எனைக் காணும் கணம் எப்பொழுது என எண்ணி துடித்த என்னவளே!என்
மீது தான் உனக்கு எத்தனைப் பாசம்,
எல்லாம் அறிந்த நான், உன் அருகில்
மட்டும் போலியாய் ஓர் நாடகம்
ஏனென்று அறிய வில்லை - என்றோ
ஒருநாள் எல்லாம் மாறும், உன்
மடியில் நான் தூங்கும் நேரம்!