இப்படியும் ஒரு காதலியா
ஒரு இளைஞன் ஓர் அழகிய இளம் பெண்ணைக் காதலித்து வந்தான்.
ஒருநாள், மறுநாள் தன் பிறந்த நாள் என்று அவள் அவனுக்கு அறிவித்தாள்.
அவன் அவளிடம் சொன்னான்.உன் வயதுக்கு இணையாகும் வகையில்
மிக அழகிய ரோஜாப் பூங்கொத்தை அனுப்பி வைக்கிறேன் என்றான்.
ஒரு பூக்கடைக்குச் சென்று 21 ரோஜாக்கள் அடங்கிய அழகிய பூங்கொத்தை
அவள் விலாசத்துக்கு அனுப்பச் சொன்னான்.மறுநாள் காதலியைச் சந்தித்த போது
அவள் மகிழ்ச்சிக்கு பதிலாக பத்திரகாளியாக கத்தினாள்.கோபத்தோடு அவனை
விரட்டி அடித்தாள்.
காதலனுக்குக் காரணம் புரியவில்லை.பூக் கடைக்காரன்,அவனுக்குப் பழக்கமானவன்,
தன் அன்பளிப்பாக கூடவே பத்து ரோஜாக்கள் வைத்து அனுப்பியிருக்கிறான்.இதுதான்
காதலி பத்திரகாளியானதற்கு காரணம்.