இயல்புக்கு இடமிருக்குமா
"நீ வாழ்ந்தாக வேண்டும்" என்றார்கள்
ஏற்றுக்கொண்டேன் நான்
என்னை நான்
முன்னுக்குத் தள்ளிக்கொண்டேன்
இருக்கும் பாதையில்
அடி எடுத்து வைத்து விட்டேன்
நான் நிலைகொண்டுள்ளேன்
முகவுரை இல்லாத நூல் போல்-
நேற்று நேற்றுக்கு இன்று
இன்று நாளைக்கு நேற்று
இது நாட்களின் நியதி
இதுவே ஒரு செய்தி
நாட்கள் நடமாடுகின்றன
காலம் என்னையும் கொண்டு செல்கிறது
இறந்தவன் சொன்னான்,
"வென்றேன் என்று"- நான் செவி கொடுத்தேன்
கட்ந்து சென்ற காற்று,
ஓவியம் ஒன்றை வரைந்தது-நான் கவனித்தேன்
கடிகாரம் சரியாக வேலை செய்கிறது
நேரம் சிரிக்கிறது- நான் புரிந்துகொண்டேன்
உரையாடல்களும்... வாழ்த்துக்களும்...
அழைப்புகள் இல்லை-நான் தெரிந்து கொண்டென்
சுரங்கள் தடுமாறுகின்றன இசை தொடர்கிறது
நான் சாட்சி ஆனேன்
பற்பல கூற்றுகள் விஷயங்கள் உடைந்தன
நான் அறிந்துக்கொண்டேன்
நிகழ்ச்சிகள்
என்ணிலா நிகழ்ச்சிகள்
எதிர்ப்பார்புகள், நிகழ்வுகள்
கூடல்கள், குழப்பங்கள்
நடக்கும் நிதமும் நடக்கும்
நான் பல அனுபவங்களின் கலவை
நான் சில பயிற்ச்சிகளின் தொகுப்பு
இது கரைகிறது
தடுக்கமுடியாத படி கரைகிறது
நான் மறையக்கூடும்
முடிவுரையே இல்லத நூல் போல்-
இயற்கை
என் மீது பறிவு காட்டும்
நான் சொல்வேன்
"நன்றி"
நான்
இயற்கையோடு இணைந்த பிறகு
எனது
இயல்புக்கு இடமிருக்குமா?