வந்து பார்

வெளிநாடு
வந்து பார்
நீ.... வெந்து
போவாய்.....

ஓய்வின்றி
உழைக்கவும்
உழைப்பின்றி
சோம்பேறி ஆக்கவும்
கற்றுத்
தரும் கறுப்பு
உலகம் இது.....

நோய்க்கு
மருந்து
உண்டு....உணவே
மருந்தாகும்.....
வாழ்வின்
சுவையான
பக்கங்கள்
பிணியின்
பிடியால்.....
சுவை கெட்டுப்
போகும்
வைத்தியர்
ஆலோசனையால்.....

வாலிபத்திலேயே
வந்து
தொலைக்கும்
வருத்தங்களால்
வாழ்வதிலே
பல
சிரமங்கள்.....இதை
வாங்கிக் கொண்டோம்
வந்து
இறங்கி.....

கூடி
வாழ்ந்த
குடிசை
வீட்டு
வாழ்க்கை.....
கோடி
சுகம்.....

மாடிவீட்டு
ஒற்றை
வாழ்க்கை
அற்றுப்
போனது
அனைத்து
சந்தோஷமும்.....

கட்டாந்
தரையில்
கொண்ட
தூக்கம்
கட்டில்
மேலே.....
இதுவரை
கண்டதில்லை.....

வெளிநாடு......


வாழ்கிறோம்
என்று
சொல்லி....
நம்மை
நாமே
ஏமாற்றிக்
கொள்ளும்
மாயை
உலகமிது.......

எழுதியவர் : thampu (10-May-15, 4:21 am)
Tanglish : vanthu paar
பார்வை : 90

மேலே