பிஞ்சு விரல்கள்
பிஞ்சு
விரல்கள் பிடித்து
விளையாட
தந்தை
இவன் நெஞ்சு
தவிக்கிறேன்
தனிமையிலே.....
இமை
மூடாத
உன் பார்வை
நான் கண்டு
இமை
மூடாமலே
என்னிரவும்
போகுதடா.....
இவ்வுலக
வாழ்வில்
எவ்வளவு
காலம்
இத்
தனிமை
எனைக்கொல்லும்.....?
தாயோடு
சேய்
செய்கிற சேஷ்டைகள்
தித்திப்பாய்
இனிக்குதடா......
வருவாய்
என்கிற
தவிப்பில்
இரவு பகலாய்
இவன்
மனம்
உன்னினைவில்.....
பாசமுடன்
அப்பா......