நண்பர்களுக்குப் போட்டிக் குறித்த சில முக்கியமான வேண்டுகோள்கள் மற்றும் தகவல்கள்

நண்பர்களுக்குப் போட்டிக் குறித்த சில முக்கியமான வேண்டுகோள்கள் மற்றும் தகவல்கள்...


1 . போட்டிக் கவிதை பதிவு செய்யும்போது *மற்ற போட்டிக்கு சமர்ப்பிக்க* என்பதை மறக்காமல் சொடுக்குதல் அவசியம்... *மற்ற போட்டிக்கு சமர்ப்பிக்க* என்று சொடுக்காமல் விடுபட்ட கவிதைகள் போட்டிப் பகுதிக்குள் சேராது.. போட்டிப் பகுதிக்குள் சமர்ப்பிக்கப் படாத கவிதைகள் போட்டித் தேர்வுக்கென்று நடுவர்களால் எடுத்துக் கொள்ளப்படாது...


தோழர்கள் தங்களது கவிதைகள் போட்டிப் பகுதிக்குள் இடம் பெற்று விட்டதா என்று ஒரு முறை சரி பார்த்து விடவும்... ஒரு வேளை போட்டிப் பகுதியில் தோழர்கள் தம் கவிதை இடம் பெறவில்லை என்றால் , கவிதையை EDIT செய்து *மற்ற போட்டிக்கு சமர்ப்பிக்க* என்பதை CLICK செய்து மீண்டுமொருமுறை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...


2 . கவிதை வரிகள் 24 வரிகளுக்கு மிகாமல் இருப்பது அவசியம் ... கவிதை சமர்ப்பிக்கும் முன்பு தட்டச்சுப் பிழைகளை ஒரு முறை சரி பார்த்து விடவும்...


3 . ஒரு போட்டியாளர் ஒரு கவிதை மட்டுமே போட்டிக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே... இதுவரை ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகளை சமர்ப்பித்து இருக்கும் நண்பர்கள் , தங்களின் ஒரு கவிதை மட்டும் போட்டிக்கென்று பதிவு செய்து விட்டு மற்ற கவிதைகளை நீக்கி விடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்...


4 . இன்று இரவு 12.00 மணியோடு போட்டி நேரம் நிறைவு பெறுகிறது... அதனால் தோழர்கள் இன்று இரவுக்குள் போட்டிக் கவிதைகளைப் பதிவு செய்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்... இரவு 12.00 மணிக்கு மேல் பதிவாகும் கவிதைகள் போட்டித் தேர்வுக்கென்று நடுவர்களால் எடுத்துக் கொள்ளப்படாது நண்பர்களே...


5 . படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை சமர்ப்பிக்கும்போது , படைப்புகளைப் படிப்பவர்கள் , படைப்புக்களில் கருத்துக்கள் பதிவு செய்ய முடியாதவாறு , 'கருத்துரை அனுமதி இல்லை' என்று சொடுக்கி விடுதல் அவசியம்... ((இந்த விதிமுறை சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு... நண்பர்கள் கவிதைப் பதிவு செய்த பிறகு அந்தக் கவிதைக்கென்று ஏதேனும் NEGATIVE COMMENTS வரும்போது , தோழர்கள் அந்தக் கவிதையை போட்டியில் இருந்து நீக்கி விட்டு போட்டியில் இருந்து பின்வாங்கிவிடும் சம்பவங்கள் நடைபெறுகிறது.. அதனால் தான் கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே , கருத்துப் பகுதியினை க்ளோஸ் செய்து விடுங்கள்))


போட்டியில் ஆர்வத்தோடு பங்கு பெரும் தோழர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் நண்பர்களே..நேசத்துடன்
கிருத்திகா தாஸ்

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (10-May-15, 9:10 am)
சேர்த்தது : கிருத்திகா தாஸ்
பார்வை : 86

மேலே