படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - கவிதைத் தலைப்பு
நீ யாரோ!!
சித்திரம் தன்னிலே
சிலையாய் கல்லிலே
சன்னமாய் அமர்ந்தவளே
நீ யாரோ!!
பிறந்தோம் வளர்ந்தோம்
பிணியிலே வாழ்ந்தோம்
பழதானதும் இறந்தோம்
மாக்கள் மனதிலே
மறுமலர்ச்சி தளிரை
முளைக்கவே வந்தவளோ!!
பெண்மையினை அழிப்போம்
காமத்தையே ஜபிப்போம்
மறுபாலை இனத்தாரை
இணையாய் துணையாய்
மறுக்கும் ஆண்பாலை
மதியூட்ட அமர்ந்தவளோ!!
பூமித்தாய் பெற்றெடுத்த
அத்தனை உயிருக்கும்
பசிப்போய் தீர்க்கும்
அன்னபூரணி அவதாரமோ!!
பசுங்காடாம் பாரதம்
செங்காடாய் வாடுது!
நதியெல்லாம் சேர்த்துவைத்து
நாடெல்லாம் செழிக்கவைக்கும்
நீதித்தாய் நீதானோ!!
உற்றாரும் பகைவராய்
உள்ளொன்றும் புறமொன்றாய்
உய்யுதே மனிதஇனம்!
எல்லார்க்கும் எல்லாமாய்
எய்யதுடிக்கும் புதுசாமியோ!!
வந்துவிடு வந்துவிடு
சட்டென்றே வந்துவிடு
தாமதமாய் இறங்கிவந்தால்
கட்டிடங்கள் மட்டுமே
மிஞ்சி நிற்கும்!!
எருவாய் உயிரெல்லாம்
புதுப்பிறவி பெற்றிருக்கும்!!