உணர்வே ஓங்கிவாழ்க

உணர்வே...! ஓங்கிவாழ்க...!

மே 10. -
அன்னையர் தின
அடையாளம்..!

நிமிடந்தோறும்
நீடித்திருக்க வேண்டிய
உணர்வு ....!
ஒரு காலண்டரின்
தாளாய் கிழிகிறது.

எந்திர வாழ்வின் -
எதார்த்தத்தினால்....
நமக்கு -
அமுத சுரபிகளை
அர்த்தப்படுத்த.....
இப்போது
அடையாள நாள்கள்
அவசியமாகிப் போனது.

"அன்னையும் -
பிதாவும் முன்னறி தெய்வம்"
தெய்வத்தை -
கொண்டாட...
ஒருநாள்...... திருநாள்.......
திருவிழா தேவையோ...?

வாழ்வை -
அடையாளங்களாய்...
அர்த்தபடுத்தி கொள்ளும்
நமக்கு -
அன்னையரையும்
அடையாளத்தால்
அறிவதில்
ஏதும்தப்பில்லை...?

உணர்ச்சிகளை -
உணர்வுகளாய்...
உணரமுற்பட்ட
நாம்...!
உணர்வுகளை
உணர்ச்சிகளாய்
கொண்டாட
தலைப்படும்
இந்நாள்தனில் -
அன்னையர்...
தினமே...!
உணர்வே...!
ஓங்கிவாழ்க...!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (10-May-15, 3:02 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 131

மேலே