படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்--போட்டிக் கவிதை---உன் சித்தப்படி வாழ வைக்கிறேன்

எதிரில்தானே நிற்கின்றேன் உன் காதலன்!
எங்கோ தொலைவில் ஏன் பார்க்கிறாய்?
உன் விழியில் ஏன் இந்த சோகம்?
உன் உதட்டில் ஏன் இந்த மௌனம் ?
உன் இசைக்கருவியில் காத்திருப்பதுதான்
என்ன கானம் ?
சோக சிலையாய் உன் கோலம் என
சொல்லக் கேட்டன்றோ ஓடி வந்தேன் ?
நான் நெடுநேரம் நிற்பது உறைக்கவில்லை?
எத்தனை உணர்ச்சிகள் பகிர்ந்து கொண்டாய் ?
எத்தனை உலகங்கள் அழைத்து சென்றாய் ?
ஓகோ!தோழன் நான் என எண்ணித்தானா ?
காதலி என்பது என் கனாத் தானா ?
போகட்டும் ! ஏற்கிறேன் என் விதியை !
உயிர் சிற்பம் உன்னை கற்சிலை ஆக்கிய
அவன் யார் ? சொல் ! இணைத்து வைக்கிறேன் !
ஆனால் …… உன் விழியில் …..!
கோபமும் அன்றோ தெரிகிறது ?
அவன் ஏமாற்றுக்காரன் என்றா ?
சிந்தித்து முடிவெடு பெண்ணே ! நானா ? அவனா ?
மாலையை உன் கழுத்தில் சூடவா ?
மாலையோடு உன்னிடம் அவனை அழைத்து வரவா ?
உத்தரவிடு!உன் சித்தப்படி வாழ வைக்கிறேன் !

எழுதியவர் : ம. கைலாஸ் (10-May-15, 10:54 pm)
பார்வை : 108

மேலே