அழியாது ஆயுளுக்கும்

அழியாது ஆயுளுக்கும்

அலையாடும் கரையோரம்
அழகான மணற்சிற்பம்
அன்பிற்கடை யாளமாக
அக்கறையாய்ச் செதுக்கிட்டேன்
அர்ப்பணிப்பேன் உனக்காக
அன்பேநீ திரும்பிப்பார் !

அடிவானம் கருத்திருச்சு
அடைமழைக்கும் வாய்ப்பிருக்கு
அலைகளெல்லாம் ஆர்ப்பரித்து
அருகினிலே வருகிறது
அச்சமென்னுள் தோன்றிடுது
அழிந்திடுமோ சிற்பமென ….!

அதற்குள்நீ சீக்கிரமாய்
அலைபேசிக் காமராவில்
அடுக்கடுக்காய்ப் படம்பிடிப்பாய்
அசலழிந்து போனாலும்
அற்புதமாய்ப் பதிந்தநகல்
அழியாது ஆயுளுக்கும் …!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-May-15, 3:27 pm)
பார்வை : 99

மேலே