இதயத்துக்கு இல்லை

வியர்வை சுரந்து
வெப்பம் தணிக்கும்
தேகம்

காயப்பரப்பில்
கசிந்து உறையும்
ரத்தம்

கண்ணில் விழும்தூசு
கழுவித்துடைக்கும்
கண்ணீர்

விரிந்து சுருங்கி
வெளிச்சம் சரிசெய்யும்
விழிப்பாவை

இதயத்திற்கு மட்டுமில்லை
உன் இழப்பைச் சமன்செய்ய
இப்படியோர் தகவமைப்பு

பிரிந்து போனாய்
சிதைந்து போனது

எழுதியவர் : பிரணவன் (11-May-15, 4:44 pm)
பார்வை : 232

மேலே