துரோகங்கள் பலவிதம்

..."" துரோகங்கள் பலவிதம் ""...

குழந்தையை பெற்றுவிட்டு
பொறுப்பிலாது விட்டுவிட்டு
ஊதாரியாய் தினம் ஊர்சுற்றும்
உழைத்துவராத உதவாக்கரை
குடிகார ''தந்தை'' துரோகம் !!!

பெற்றெடுத்த பிள்ளையை
தன் மாரூட்ட மனமின்றி
அனாதையாய் எறியப்பட்ட
குப்பைத்தொட்டி குழந்தைகள்
இழிவான ''தாய்'' துரோகம் !!!

கரம்பிடித்து துணைவியை
நித்தமுமாய் துன்புறுத்தி
நித்திரையிலா சித்தரவதைத்து
சந்தோசிக்கும் சாத்தானாய்
கொடூர "கணவன்" துரோகம் !!!

கொண்டவனை இழிவு செய்து
என்னதான் செய்துவிட்டாய்
நீயென்றே ஏளன மொழிபேசி
ஆசையடங்கா ஆணவத்தின்
அரக்க "மனைவி" துரோகம் !!!

தன் தாய்வீட்டை விட்டுவிட்டு
மருமகளேன்று வந்தவளை
மகளைப்பெற்ற குணவதியும்
அடிமையாக்கி நடத்திவரும்
அகந்தை "மாமியார்" துரோகம் !!!

கடமை நிலைநாட்டி கனிவை
நிதம்காட்டி கண்ணியமாய் தன்
பெற்றோராய்யல்ல பெரியோராய்
மதியாத மமதை குணம்கொண்ட
அசட்டு "மருமகள்" துரோகம் !!!

ஆசை மொழிபேசி வாழ்வே
நீயென ஆயிரம் பொய்சொல்லி
மோகத்தால் மோசம் செய்தினி
தேவையில்லை எனச்சொல்லும்
வேசன் "காதலன்" துரோகம் !!!

காலையொன்று மாலையொன்று
மணமாலை சூடிட வேறொன்று
பொழுதுபோக்காய் பொழுதுபோக்க
பொழுதை எல்லாம் வீணடிக்கும்
வஞ்சக "காதலி" துரோகம் !!!

நல்லவனாய் நாடகம் நடித்து
நயவஞ்சகம் மட்டுமே செய்து
நாடி நரம்பை அறுத்தெரிந்து
குருதியில் சூட்டில் குளிக்கும்
நாசம் "நட்பின்" துரோகம் !!!

மனிதத்தினை கொன்றுவிட்டும்
சாதிகளென்றும் மதங்களேன்றும்
மனித உயிரை கொன்றோடுத்து
ஊடம்கொடுத்து ஊட்டிவளர்க்கும்
நம் ''சமூகத்தின்'' துரோகம் !!!

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (11-May-15, 6:39 pm)
பார்வை : 462

மேலே