துருவச் சேனையில் ஒன்று

என் முன்னே ஈர இதழ் விரித்தாடும் மாலை எனும் மயில் கண்டேன்...

அதன் சிறகில் ஈர துகள்கள் ஓராயிரம்..

அம் மெல்லிய தூரிகைகள் என் உளமதில் குளிராய் தேங்கும்..

எம் படிந்த தோலை அள்ளி கொள்ளும்..

தேக உதிரம் பலவும் நானும்....

பொழியும் பனியோடு,
பச்சை வயல் ஈரத்தோடு தென்றல் செய்யும் நெசவு
குளிர் ஆடையாய் என் மேனி சேரும் போது
உள்ளச் செறிவு பிளிரும்..

வெளிச்சம் குன்றிய பகல்..

முழங்கும் இடியோ நல்வரவு..

அந்தி மாலையின் நிறத்திரிபுகள்......

மண் கூட்டம் மொழியும் வாடை..

இவை அழகுற கசிந்தென்னை ஒருமை செய்யும்

இது வசந்தமோ?என்று நெஞ்சம் சற்றே சருக்கி நிற்கும்...

எழுதியவர் : சிவசங்கர்.சி (11-May-15, 7:10 pm)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
பார்வை : 73

மேலே