உன் பளிங்கு பாதம்

உன் வாழை தண்டு கால்கள் கண்டு
கவிஞனான இம்மண்டு
வழுக்கிடவும் வாய்ப்பு உண்டு//
உன் பூனை முடி பாதத்திலே
கொலுசு உறவாடும் நேசம் கண்டு
என் இதயம் கருகிடுமே
நொந்து கொண்டு//
உன் கொலுசின் ஜதி காட்டி
என் வயதை அதில் மாட்டி
என் இளமை சுதி கூட்டி
விழ வைத்தாய் சீமாட்டி//
ஜல் ஜல் ஒலி வழியே
அருவியின் ஆர்ப்பரிப்பும்
ஆழியின் அலையடிப்பும்
வாலிபத்தை இரையாக்கி
என் பேனாவை சிறையாக்கும்//
உன் கொலுசு பாடும் ராகம்
தூண்டி விடும் மோகம்
கட்டுக் கடங்கா தாகம்
என் உறக்கம் கொல்லும் சாபம்//
உன் கொலுசின் முத்துக்கள்
எத்தனையோ சிம்பொனிகளும்
கீர்த்தனைகளும் இசைக்கிறது....
ஒரு துள்ளல் நடையில்//
உன் கொலுசின் பரல்கள்
நிகழ்த்தும் நிரல்கள்
ஒவ்வொன்றும் கஜல்கள்//
உன் கொலுசொலியின் ஓசை
எக் கருவிகொண்டும்இசைக்க முடியா இசை//
உனைப் போல் கச்சேரி செய்ய
ஒரு வித்வானாலும் முடியாது
நீ வீசி வீச தூரம்
நடந்தால் போதுமே....//
நான் சட்டமியற்றும்
அதிகாரம் கொண்டிருந்தால்
உன் கொலுசொலியை
தேசிய இசையாக்குவேன்