நிழல் யுத்தம்

கண்ணீரில்
அமிழும்
ஓர் சமுத்திரத்தின்
லாவாவிலிருந்து
சிறகடித்து!!

நெடிய இரவொன்றில்
என் மீது
எரிமலை
குழம்பையும்
நீர்த்திவலைகளையும்
சொரிந்து விட்டு!!

பரிணாம
சிறகுகளை
விரல்களால்
கோதியபடி
பெருத்த பாதத்தை
குருமணலில்
பதித்துக்கொண்டிருக்கிறது!!

கண்ணுக்கெட்டும்
தூரம் வரை
அதன் கோர‌
சுவடுகள்!!!

நாளை இந்த‌
காட்சியில்
என் பேரன்
அகப்பட்டுக்கொள்வான்!
அப்போது அது
வேறோர் உருவத்தை
தரித்திருக்கு,!!

இருப்பினும்
என்னைப்போல்
அகப்பட்டுக்கொள்வான்
அவனும்
அதற்க்குள்!!

இப்படித்தான்
என் இனத்திலேயே
குருதி குடித்து
வளர்ந்திருக்கும்
போல் அது.....

ஆனால் அது
பற்றிய சாட்சியங்களை
அலச முற்படின்
புனைவுகளோடு
போராட வேண்டும்....

இனியோர்
யுத்தம்
என் தேசத்தில்!
அல்ல அல்ல‌
எந்த தேசத்திலும்
வேண்டாம்....

எழுதியவர் : புலவூரான் ரிஷி (12-May-15, 12:19 am)
Tanglish : nizhal yutham
பார்வை : 157

மேலே