பதிந்த பாலமாய்
புதைசேற்றில் கால் மாட்டினால்
புதுப்பாதை ஒன்று வேண்டும்!
புதுப்பாதை சகதிகள் தாண்ட
படிக்கல்லாக வேண்டும்!
படிக்கல்லோ இடைக்கற்களாக இல்லாமல்
பாதைக் கடக்க பதிந்த பாலமாய்
நீண்டிட வேண்டும்!
பாதைக் கடக்க இத்தனை வசதிகள்
பதவிசாய் கிடைத்தால் உண்மையில்
பயணங்களில் புதைசேறென்ன
புயலே அடித்தாலும் வாழ்க்கைப்
பயணம் பணயமில்லாது கரை சேரும்.!

